ஆமை போல்
தவழ்ந்து வந்த என்னை
நடக்க வைத்து,
குதிரை போல்
ஓடக் கற்றுக்கொடுத்து,
இன்று நான் பட்டமாய்ப் பறக்க
உறுதுணையாய் இருந்தவர்கள்
நீங்கள் மட்டுமே!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
பள்ளிப் பருவத்தையும்
உங்கள் நினைவுகளையும்
என்றும் என் நெஞ்சில் சுமப்பேன்
மகிழ்ச்சியாய்!
_ கி.கிருபா✍ ( கவிச்சிற்பி)
![]() |
சரோஜினி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் |
முன்னாள் ஆசிரியர்களை நினைவு கூரும் உன் பண்பாடு போற்றத் தக்கது. படத்தின் அடியில் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்.
ReplyDeleteநன்றி ஐயா..பள்ளியின் பெயரை தற்பொழுது இணைத்துவிட்டேன்...
ReplyDeleteஆசிரியர்களை நினைவு கூர்வது நன்று.
ReplyDeleteநன்றி ஐயா
Delete