கருவறையில் என்னைச் சுமந்து,
உயிர் கொடுத்து ,
உடலாய் உலகிற்கு அறிமுகப்படுத்தி,
உன் துயர் மறைத்து,
என் துயர் போக்கி,
உன் ஆசை எனும் மாளிகையைச் சிதைத்து,
என் ஆசை எனும் மாளிகையைக் கட்ட
உறுதுணையாக இருப்பவளே...
எனக்காக மட்டுமே வாழும் உனக்கு
விலைமதிப்பற்ற அழகிய
சிம்மாசனம் கட்டி உள்ளேன்
என் இதயத்தில்!
- கிருபா✍ ( கவிச்சிற்பி)
![]() |
இது என் நெஞ்சைத் தொட்ட கவிதை. இப்படி ஒவ்வொருவரும் அன்னையை அன்புடன் வழிபடலாம்.
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDelete