தினம் தினம் இரசிக்கிறேன் உன்னை
சுற்றித் திரியும் குருவிகள்
தத்தித் தவழும் மீன்கள்
மீன்களைப் பிடிக்க காத்திருக்கும்ஒற்றைக்கால் கொக்குகள்
நீந்தி விளையாடும்
நீர் வாத்துகள்
வானை இரசிக்க மலரும்
மலர்கள்
வெட்கப்பட்டு நிற்காமல்
ஓடும் நீர்
மனம் குளிர வைக்கும்
தென்றல் காற்று
இன்னும் சொல்லிக்கொண்டே போவேன் உன் அழகை
ஆனால் இரசிக்கத்தான் என்
இரு கண்கள் போதவில்லையே!!!
_கிருபா✍(கவிச்சிற்பி)
அற்புதமான வரிகள் இறுதியில் மனம் கனமானது.
ReplyDelete- கில்லர்ஜி
மிக்க நன்றி ஐயா🙏
Deleteஅருமை அருமை..!!
ReplyDeleteநன்றி 😃
Delete