தந்தையின் கரம் பிடித்துத்
தத்தி நடைப் பழக
காதோரம் அவரின் கதை கேட்டுக்
கனிவாய் உணவுண்ண
அவரோடு கதையாய் கதைத்துக் கனிவாய்ப் பேசிட
அவரின் கள்ளமில்லா சிரிப்போடு
களித்து விளையாடிட
அப்பாவின் அணைப்போடு
அண்டம் சுற்றி வர
அன்பாய் அவரின் ஆசை மகளாக
என் ஆசைகள் அத்தனையும் சொல்லத்தான் நினைக்கிறேன்
சுகமாய் வாழ்ந்திட!
_கிருபா (கவிச்சிற்பி)
No comments:
Post a Comment