Total Pageviews

Friday, 21 October 2022

எது வாழ்க்கை?

 எது வாழ்க்கை?


கடந்த காலத்தையே நினைத்திருப்பதா?

எதிர்காலத்தை நினைத்து வருந்துவதா?

சென்றதையும் வருவதையும் நினைத்து நிகழ்காலத்தில் வாழாமல் இருப்பதா?

சுற்றத்தாருக்குக் கேடு நினைப்பதா?

நெருங்கியவருக்குத் துரோகம் செய்வதா?

நட்பில் பொறாமை கொள்வதா?

பொறாமை கொண்டு பகையை வளர்ப்பதா?

நல்வினை இருக்க தீவினை செய்வதா?

சந்தேகம் எனும் கொடிய நோய் கொண்டிருப்பதா?

அக் கொடிய நோயால் உறவைப் பிரிவதா?

உறவைப் பிரிந்து துயர் கொள்வதா?

துயர் கொண்டு தனிமையில் வாடுவதா?

தனிமையில் இன்பத்தைத் தொலைப்பதா?

இன்பம் தொலைத்து வாழ்வை இழப்பதா?


எது வாழ்க்கை?

                                         _கி.கிருபா✍            

2 comments:

இருபதுகளில் போதை 

தொண்ணூறுகளில் இளைஞர்கள் தம் நண்பர்களோடு  கில்லியும் பல்லாங்குழியும் விளையாடினர்